VD 12 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

VD 12 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

விஜய் தேவரகொண்டா தற்போது ‘VD 12’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

கௌதம் தின்னனுரி இதற்கு முன் ‘ஜெர்ஸ்ஸி’ & ‘மல்லி ராவா’ ஆகிய படங்களை இயற்றியும், அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

‘VD 12’ திரைப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ‘VD 12’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 60% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படத்தை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி அன்று வெளியிடப்படும் என பட குழு தீர்மானித்திருக்கின்றது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் இந்த மாதமே அறிவிக்கப்படுமெனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் தேவரகொண்டா மிகவும் கோபத்துடன் முகத்தில் இரத்தத்துடன் கத்திக் கொண்டு இருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )