உருளைக்கிழங்கு சீஸ் போல்ஸ்
உருளைக்கிழங்கும் சீஸூம் எப்பொழுதுமே சூப்பரான சுவையை உணவுப் பிரியர்களுக்கு கொடுக்கும்.
அந்த வகையில் சீஸ் போல்ஸ் அருமையான ஒரு ரெசிபி.
இனி உருளைக்கிழங்கு சீஸ் போல்ஸ் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு – 4
- ப்ரெட் துண்டுகள் – 8
- சோள மா – 4 மேசைக்கரண்டி
- சீஸ் (துருவியது) – கால் கப்
- பால் – 1 கப்
- கோதுமை மா – 1 மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய் – 4
- இஞ்சி – சிறிய துண்டு
- வெள்ளைப்பூண்டு – 4 பல்
- கொத்தமல்லி – ஒரு கட்டு
- எலுமிச்சைச் சாறு – 1 மேசைக்கரண்டி
- மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி, மசித்துக் கொள்ளவும்.
பின் இஞ்சி, வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதனை மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
தொடர்ந்து சோள மா, கோதுமை, பால், துருவிய சீஸ், பால், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.
ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, இரண்டாக வெட்டவும்.
வெட்டிய ப்ரட் துண்டுகளின் மீது உருளைக்கிழங்கு மசாலாவைத் தடவி அதன் மீது சோள மா கலவையை பரப்பிவிட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு சீஸ் போல்ஸ் ரெடி.