வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ்
வங்காளதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு பாராளுமன்றத்தை ஜனாதிபதி முகமது சஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார்.
மேலும், இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தளபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனிசை இடைக்கால அரசின் தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், வங்காளதேசத்தில் அமைய உள்ள இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிசை நியமித்து அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
CATEGORIES World News