பங்களாதேஷில் இருந்து  இந்தியாவுக்கு செல்ல பலர் முயற்சி !

பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்கு செல்ல பலர் முயற்சி !

ப ங்களாதேஷில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி ஏராளமானோர் இந்தியாவுக்கு வந்து சேருவதற்கு
முயற்சிக்கின்றனர்.

ஆனால் இந்திய எல்லையில் குவிந்துள்ள அவர்களை இந்தியப்படை வீரர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பங்களாதேஷில் இடஒதுக்கீடு தொடர்பாக, ஒரு மாத காலமாக நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை இராஜினாமா செய்தார். நாட்டை விட்டு வெளியேறிய அவர், இந்தியாவில் தங்கி உள்ளார்.

பங்களாதேஷில் இராணுவத்தின் வழி நடத்தலில் இடைக்கால அரசு அமுலுக்கு வந்துள்ளது.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றுள்ளது.

ஆட்சி மாற்றத்தின் எதிரொலியாக பங்களாதேஷில் இருந்து 500 இற்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு வருவதற்கு முயற்சி செய்தனர்.

இந்திய எல்லையில் குவிந்த அவர்களை பி.எஸ்.எப் வீரர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் பங்களாதேஷின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

பங்களாதேஷில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக அந்நாட்டு மக்களில் பலர் இந்தியாவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்திய எல்லையோர கிராமங்களில் கண்காணிப்பை
பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க அரசும், எல்லையோரமாவட்டங்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )