சிக்கன் மஷ்ரூம் கறி ; இப்படி செய்து பாருங்கள்
சிக்கனை தனியாகவும் மஷ்ரூமை தனியாகவும் சாப்பிட்டாலே நன்றாக இருக்கும்.
அதிலும் இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் எப்படியிருக்கும்.
அதன்படி, சிக்கன் மஷ்ரூம் க்ரேவி எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் – 1 கிலோ
- மஷ்ரூம் – 1/2 கிலோ
- ப்ரெஷ் க்ரீம் – தேவையான அளவு
- சோள மா – 100 கிராம்
- வெங்காயம் – 2
- வெள்ளைப் பூண்டு – 2
- பட்டர் – தேவையான அளவு
- மிளகுத் தூள் – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தப்படுத்தி, சோள மா, மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து அரை மணித்தியாலம் ஊறவிடவும்.
பின் மஷ்ரூமை தேவையான அளவுகளில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் சிறு துண்டுகளக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் ஊற வைத்த சிக்கனை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் இறக்கிவிடலாம்.
பின் ஒரு பாத்திரத்தில் பட்டர் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் மஷ்ரூம்களை சேர்க்கவும். அதனுடன் வெள்ளைப்பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
அனைத்தும் ஒரே கலவையாக வரும்போது ப்ரஷ் க்ரீமை சேர்த்து பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.
இதனை சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும்.