இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து நட்சத்திரம் இயன் பெல் (Ian Bell) நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) நேற்று (13) அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்த நியமனம் வந்துள்ளது.

ஆகஸ்ட் 16 அன்று பெல், இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்குவார், மேலும் தொடரின் முடிவு வரை பயணக் குழுவுடன் இருப்பார் என்றும் SLC கூறியுள்ளது.

இது தொடர்பில் SLC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா,

“அங்குள்ள (இங்கிலாந்தில்) நிலைமைகள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளுடன் வீரர்களுக்கு உதவுவதற்காக உள்ளூர் அறிவுள்ள ஒருவரைக் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு கொண்டு வருவதற்காக இயானை நியமித்தோம்.

இயன், இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் அதிகம். இந்த முக்கியமான சுற்றுப்பயணத்தில் அவரது வருகை எங்கள் அணிக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

பெல் 118 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42.69 சராசரியில் 7,727 ஓட்டங்களை எடுத்துள்ளார், அந்த நேரத்தில் 22 சதங்கள் அடித்துள்ளார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகளிடையிலான முதல் டெஸ்ட் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )