சிறிகொத்தவில் கேஸ் சிலிண்டர்

சிறிகொத்தவில் கேஸ் சிலிண்டர்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இதுவரை காலமும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த யானை சின்னத்துக்கு பதிலாக தற்போது ‘கேஸ் சிலிண்டர்’ சின்னம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கட்சி தலைமையக அலுவலகத்துக்கு முன்பாக கட்சியின் ஸ்தாபக தலைவர் டிஸ்.எஸ் சேனாநாயக்கவின் படம், தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் படத்துடன் இடையில் யானை சின்னமும் காணப்பட்டுவந்தது.

யானை சின்னம் நிலையானதாக இருந்தது. எனினும், தற்போது அந்த கேஸ் சிலிண்டர் சின்னம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யானை சின்னம் மறைக்கப்பட்டமை தொடர்பில் ஐதேக ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. எனினும், இது தற்காலிக ஏற்பாடு மாத்திரமே என ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)