தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

தபால் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. 

தபால் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை நடத்த முடிவு செய்ததாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்த தெரிவித்தார். 

மேலும் அவர் ”பணியாளர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல சிக்கல்கள் தபால் துறையில் உள்ளன. 

இந்தப் பிரச்சினைகள் குறித்து அஞ்சல்மா அதிபருடன் கலந்துரையாடியதாகவும், இதன்போது எந்தவித சாதாரண நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறிவிட்டதாகவும், எனவே இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்த தினங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )