ஷேக் ஹசீனா ஆட்சியில் ஆண்டுக்கு 16 பில்லியன் டாலர் திருடப்பட்டது என வங்கதேச அரசு குற்றச்சாட்டு

ஷேக் ஹசீனா ஆட்சியில் ஆண்டுக்கு 16 பில்லியன் டாலர் திருடப்பட்டது என வங்கதேச அரசு குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொருளாதார நிபுணர் தேபப்ரியா பட்டாச்சார்யா தலைமையிலான குழு வங்கதேச பொருளாதாரத்தின் வெள்ளை அறிக்கையை முகமது யூனுஸ் அவர்களிடம் வழங்கியுள்ளனர்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 16 பில்லியன் அமெரிக்க டாலர் சட்டவிரோதமாக வெளியேறியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில் 29 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதில் குறிப்பாக 7 பெரிய திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் 100 பில்லியன் டாக்கா ($836 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளது.

இந்த 7 திட்டங்களின் ஆரம்ப செலவு 1.14 டிரில்லியன் டாக்கா என மதிப்பிடப்பட்டது. பின்னர் ஹசீனாவின் அரசாங்கம் இந்த திட்டங்களின் செலவுகளை 1.95 டிரில்லியன் டாக்காவாக அதிகபடுத்தியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)