அல்பேனியாவில் டிக்-டாக் செயலிக்கு தடை

அல்பேனியாவில் டிக்-டாக் செயலிக்கு தடை

ஐரோப்பாவின் தென்கிழக்கே அமைந்துள்ள பால்கன் வளைகுடா நாடு அல்பேனியா. இங்கு பிரபல சமூகவலைதளமான டிக்-டாக் செயலி மூலம் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சக மாணவனை சிறுவன் கத்தியால் குத்திக் கொன்றான். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மாணவர்களிடையே வன்முறையை தூண்டுவதாக கூறி டிக்-டாக் செயலிக்கு அல்பேனியா அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஓராண்டுக்கு தொடரும் என பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசின் இந்த முடிவு அவசர கதியில் எடுக்கப்பட்டு இருப்பதாக டிக்-டாக் செயலியின் பைட் டான்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியது.

இதற்கு பதிலளித்து பேசுகையில், அரசின் இந்த முடிவு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பலமுறை சந்திப்புக்கு பின்னரே எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் எடி ராமா கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)