
புகைபிடிக்காதவர்களிடையே அதிகரிக்கும் நுரையீரல் புற்றுநோய்
உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்திலுள்ள லான்செட் சுவாச மருத்துவ இதழ் நடத்திய ஆய்வினூடாக குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 53 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோய் பெண்கள் மற்றும் ஆசிய மக்களிடையே அதிகமாகக் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka