
வரவு – செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு இன்று !
2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
அதன்படி, குறித்த விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 25ஆம் திகதி அன்று மாலை நடைபெறும்.
அத்துடன், ஒதுக்கீட்டு மசோதா மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
மேலும், ஒதுக்கீட்டு மசோதாவின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.