இன்று மிதமான நிலையில் காற்றின் தரம்

இன்று மிதமான நிலையில் காற்றின் தரம்

நாட்டின் அனைத்து நகரங்களிலும் புதன்கிழமை (05)   காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் என  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் 52 – 100 க்கு இடையில் காற்றின் தரச்சுட்டெண் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

நாட்டில் நேற்று (04) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், வவுனியா, கேகாலை, நுவரெலியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் நல்ல நிலை நிலையிலும் காணப்பட்டது.

அதிகமாக போக்குவரத்து நெரிசல்  காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு மிதமாான நிலையில் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)