
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக ப. மதனவாசன் நியமனம்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமான ப. மதனவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ மதனவாசனுக்கு நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்துள்ளார்.