இஸ்லாத்தில் யாரெல்லாம் நோன்பு நோற்கத் தேவையில்லை ?

இஸ்லாத்தில் யாரெல்லாம் நோன்பு நோற்கத் தேவையில்லை ?

இஸ்லாமியர்கள் அனைவருக்கும் நோன்பு கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், சில விதிவிலக்குகளும் உண்டு.

1) குழந்தைகள் – பருவமடைவதற்கு முன்பு அவர்கள் நோன்பு நோற்க வேண்டிய அவசியமில்லை.

2️) வயதானவர்கள் – உடல் பலவீனமானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்கள் அதற்கு பதிலாக ஃபித்யா (தர்மம்) கொடுக்கலாம்.

3️) நோய்வாய்ப்பட்டவர்கள் – தற்காலிக நோய் என்றால், அதிலிருந்து மீண்ட பிறகு நோன்பு வைக்கலாம். நாள்பட்ட நோய் என்றால் ஃபித்யா கொடுக்கலாம்.

4️) கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் – நோன்பு வைப்பதால் அவர்களுக்கு அல்லது குழந்தைக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்னை ஏற்படுமானால், தவறவிட்ட நோன்புகளை பின்னர் ஈடு செய்யலாம் அல்லது ஃபித்யா கொடுக்கலாம்.

5️) பயணிகள் (முசாஃபிர்) – 80 கி.மீ.க்கு மேல் பயணம் செய்பவர்கள் நோன்பைத் தவிர்த்துவிட்டு, பின்னர் அதை ஈடு செய்யலாம்.

6️) மாதவிடாய் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பெண்கள் – நோன்பு நோற்கத் தேவையில்லை, தவறவிட்ட நோன்புகளை பின்னர் ஈடு செய்யலாம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)