
‘பெருசு’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக ‘பெருசு’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இது அவர்கள் தயாரிக்கும் 16 வது திரைப்படமாகும்.
இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார்.
படத்தின் இசையை அருண் ராஜ் மேற்கொண்டுள்ளார்.
திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
டிரெய்லர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது.
படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
CATEGORIES Cinema