
ஜூனில் தொடங்கும் தனுஷின் 55வது படத்தின் படப்பிடிப்பு
நடிகர் தனுஷின் 55 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தை அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.
குறித்த திரைப்படத்திற்கான பூஜை வழிபாடுகள் அண்மையில் நடைபெற்றன.
இந்த படத்தை “கோபுரம் பிலிம்ஸ்” அன்புச்செழியன் தயாரிக்கிறார்.
அமரன் திரைப்படத்தை போலவே இந்த திரைப்படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
CATEGORIES Cinema