
கருட பஞ்சமி பற்றி உங்களுக்குத் தெரியுமா?
கருடனும் பாம்பும் பரம எதிரிகள். ஆனால், அவர்கள் இருவருக்கும் கருட பஞ்சமி என அழைக்கப்படும் ஒரு தினத்தில் ஒரே நேரத்தில் பூஜை செய்யப்படுகிறது.
எதற்காக ஒரே நேரத்தில் இது அனுஷ்டிக்கப்படுகிறது ?
கருட பகவான் பிறந்த நாள்தான் கருட பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தின் வளர்பிறை பஞ்சமி தினத்தன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
கருட பஞ்சமி தினத்தன்று பெண்கள் விரதம் இருந்தால் கருடனைப் போல் தாய்ப்பாசம் அதிகமாக இருக்கும் புத்திரர்கள் பிறப்பார்கள் என்பது ஒரு நம்பிக்கையாக உள்ளது.
பறவை இனங்களிலேயே கருடன் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார்.
அதேபோல் நாகமும் பெருமாளைத் தாங்கும் ஆதிசேஷனாக விளங்குகிறார்.
எனவே கருட பஞ்சமி தினத்தன்று நாகத்தையும் வழிபடுவது ஒரு மரபாக இருக்கிறது.
மேலும் கருடனின் உடலில் ஆபரணங்களாக அஷ்ட நாகங்களே உள்ளன. இதன் காரணமாகவே கருட பஞ்சமியில் கருடன் மற்றும் நாகத்துக்கு ஒரே நேரத்தில் பூஜை நடக்கின்றன.