
லொக்கு பெட்டியின் உதவியாளர்கள் இருவர் கைதுப்பாக்கியுடன் கைது
அம்பலங்கோடை – பலப்பிட்டிய பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்தோல் ரக துப்பாக்கி, ஒரு மகசின் , 16 ரவைகள் மற்றும் 11 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகுங்கல்ல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இந்தத் துப்பாக்கி, சில நாட்களுக்கு முன்னர் வேறொரு நபர் மூலமாக குறித்த சந்தேகநபருக்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
அந்த நபரும் நேற்று முன்தினம் (03) இரவு அம்பலங்கோடை, வாதுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘லோகு பெட்டி’ என்பவரின் உதவியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏதேனும் ஒரு குற்றச்செயலைச் புரிவதற்காகவே இவர்களுக்கு இந்தத் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அகுங்கல்ல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

