
பாலியல் வன்கொடுமையில் இருந்து சிறுமியை காப்பாற்றிய குரங்கு கூட்டம
பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை தாக்கி, அவரிடமிருந்து 6 வயது
சிறுமியை குரங்கு கூட்டம் ஒன்று காப்பாற்றியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் 6 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற நபர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக காட்டில் உள்ள பழைய வீட்டிற்கு இழுத்து சென்றுள்ளார்.
அழுகை சத்தம் கேட்டு வந்த குரங்குகள், அந்த நபரை ஆக்ரோஷமாக தாக்கியுள்ளன. இதனால் அந்த நபர் சிறுமியை விட்டு விட்ட அங்கிருந்து ஓடியுள்ளார்.
அங்கிருந்து தப்பிய சிறுமி வீட்டிற்கு வந்து, பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த அடையாளம் தெரியாத நபர் மீது போக்சோ சட்டத்தில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு
விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், “சி.சி.ரி.வி. காட்சிகளில் அந்த நபர், எனது மகளுடன் ஒரு குறுகிய பாதையில் நடந்து செல்வதைக் காண முடிந்தது.
அந்நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. எனது மகளை கொன்று விடுவதாக
மிரட்டியுள்ளார். குரங்குகள் இல்லாமல் இருந்திருந்தால் என் மகள் இந்நேரம் இறந்து
போயிருப்பாள்” என தெரிவித்துள்ளார்.