8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 

நாட்டிலுள்ள 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை வளவ கங்கை மற்றும் களு கங்கை ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் குறித்த நீர்த்தேக்கங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)