வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்து குழப்பமடையத் தேவையில்லை என குறித்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”தற்போது இதை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 4-5 வருடங்களாக வாகனம் இன்றி எங்களது துறை வீழ்ந்து கிடக்கிறது. நாங்களும் வாகனம் கொண்டு வர விரும்புகிறோம்.

இந்த ஆண்டு பஸ்கள் மற்றும் லொறிகள் கொண்டு வரப்படும் என்றும், அதன்பிறகு ஏனைய வாகனங்களையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் விரைவில் கொண்டு வர முடியும் என்றும் நம்புகிறோம். தற்போது எந்தவொரு வாகனத்தையும் கொண்டு வர அரசாங்கத்திற்கு தீர்மானம் இல்லை.

புதிய அரசாங்கத்தின் இந்த முடிவு மாறுமா என்று கூற முடியாது. தங்களிடம் உள்ள வாகனத்தை விற்பனை செய்வது தொடர்பில் யாரும் குழப்பமடைய வேண்டாம். வாகனங்கள் எப்போது கொண்டுவரப்படும் என அரசாங்கம் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.

இது குறித்து அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். அரசு அறிவிக்கும் வரை யாரும் தங்கள் வாகனத்தை குறைந்த விலைக்கு விற்க விரும்பவில்லை.” என தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)