
Clean Sri Lanka திட்டத்தில் பேர வாவியை சுற்றியுள்ள பகுதிகளில் துப்புரவுப் பணிகள்
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மற்றொரு கட்டமாக, கொழும்பு மாநகர சபை மற்றும் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையுடன் இணைந்து, முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையில், கொழும்பு பேர வாவி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யும் திட்டம் நேற்று (06) ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான இடமாகக் கருதப்படும் பேர வாவியைப் புதுப்பித்து தூய்மையாகப் பராமரிப்பதே இந்த விசேட திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த முயற்சியின் கீழ், பேர வாவியின் முக்கிய பகுதிகளில், குறிப்பாக நவம் மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

