6 சிங்க குட்டிகளுக்கும் பெயர் சூட்டு விழா

6 சிங்க குட்டிகளுக்கும் பெயர் சூட்டு விழா

அம்பலாந்தோட்டை – ரிதியகம சஃபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்த 6 சிங்கக் குட்டிகளுக்குப் பெயரபெயரிடும் நிகழ்வு நேற்று (12) நடைபெற்றது.

மூன்று மாத வயதுடைய ஆறு சிங்கக் குட்டிகளுக்கு பெயரிடுவதற்காக சஃபாரி பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதோடு, இப்பூங்காவில் வளரும் ஐந்து பெண் சிங்கக் குட்டிகளுக்கும் ஓர் ஆண் சிங்கக் குட்டிக்கும் பொதுமக்கள் சூட்ட விரும்பும் பெயர்களை அஞ்சல் அட்டையில் எழுதி, அதனுடன் தொலைப்பேசி எண்ணையும் இணைத்து ரிதியகம சபாரி பூங்காவின் முகவரிக்கு அனுப்புமாறு அதன் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி, பரிந்துரைக்கப்பட்ட சுமார் 4,000 பெயர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பெயர்களின் பெயரிடல் நிகழ்வு விலங்கியல் பூங்காத் துறையின் இயக்குநர் ஜெனரல் ஆர்.சி. ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, ஆண் சிங்கக் குட்டிக்கு மேகா என்றும், ஐந்து பெண் சிங்கக் குட்டிகளுக்கு தாரா, அக்ரா, பூமி, அகிரா மற்றும் எல்சா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ரிதியகம சஃபாரி பூங்கா பொறுப்பாளர் ஹேமந்த சமரசேகர மற்றும் கால்நடை மருத்துவர் நதுன் களுஆராச்சி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

லாரா மற்றும் சூலாவின் குட்டிகள்

1. மேகா (ஆண் விலங்கு) – உதும் இந்துவர – காலி
2. தாரா – அஹிங்சா தில்ருக்ஷி – தெரனியகல
3. அக்ரா – தெமிண்தி தெஹன்சா

டோரா மற்றும் வொலீயின் குட்டிகள்
1. பூமி – நிஷிதா எகொடகெதரா
2. அகிரா – துலீஷா பரணமாத – பாணந்துறை
3. எல்சா – திலீப நிமரால் – பிங்கிரிய

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)