
இலங்கை பொலிஸாருக்கு ஸ்பீட் கன் சாதனங்கள்
போக்குவரத்து விபத்துகளை குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்கள் இலங்கை பொலிஸிற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1.2 கிலோமீட்டர் தொலைவில் வரும் வாகனத்தின் வேகம், சாரதியின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் இலக்கம் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற முடியும்.
இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவை நீதிமன்றத்தில் சாட்சியாக சமர்ப்பிக்கவும் முடியும் என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணவல தெரிவிதத்துள்ளார்.
