
ஜப்பானில் பற்றியெரியும் காட்டுத்தீ ; 1,200 பேர் வெளியேற்றம்
ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் தொடங்கிய காட்டுத்தீ, அருகில் உள்ள நகரங்களுக்கும் பரவத் தொடங்கியதால், 100 வீடுகள் தீக்கிரையாகி உள்ளன.
இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அதேபோல் 6.500 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி 1,200 பேர் அங்கிருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சிடித்து வருகின்றனர். இதன்படி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காட்டுத்தீ சம்பவம் அரை நூற்றாண்டில் அந்நாட்டின் மிகப்பெரிய தீ விபத்தாக கருதப்படுகிறது.