ஹட்டன் டிப்போ பேருந்து நடத்துனர் அட்டகாசம்

ஹட்டன் டிப்போ பேருந்து நடத்துனர் அட்டகாசம்

ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் அரச பேருந்து ஒன்றின் நடத்துனர் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக பேருந்தில் இருந்து வெளியேறுமாறு கூறிய சம்பவம் நேற்று (06) இடம் பெற்றுள்ளது. 

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட கினிகத்தனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களையே இவ்வாறு பேருந்து நடத்துனர் பேருந்தில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார். 

பாடசாலை மாணவர்களுக்கு என்று இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச் சீட்டை, பேருந்து நடத்துனரிடம் காண்பித்த போதும், பருவச் சீட்டை வைத்திருக்கும் மாணவர்களைப் பேருந்திலிருந்து வெளியேறுமாறு நடத்துனர் தொடர்ந்து வலியுறுத்தியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் ‘இது அரசப் பேருந்து நடத்துனரின் சொந்த பேருந்து அல்ல. பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் செலுத்தி பருவச் சீட்டைப் பெற்றுள்ளோம். எங்களால் பேருந்தை விட்டு வெளியேற முடியாது’ என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

அதற்குப் பதிலளித்த பேருந்து நடத்துனர், ‘ஆம், இது என்னுடைய பேருந்து; நீங்கள் அனைவரும் பேருந்தை விட்டு இறங்குங்கள்’ எனக் கூறும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)