
சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கம் 24 மணி நேர வேலைநிறுத்தம்
திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்த சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சுடன் இடம்பெறற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தினாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.”என தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka