கஜினி 2 குறித்து அப்டேட்டை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

கஜினி 2 குறித்து அப்டேட்டை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே எந்திரன், சந்திரமுகி, விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.

இந் நிலையில் கஜினி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கஜினி படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2005-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் சூர்யா, நயன்தாரா, அசின், பிரதீப் ராவத், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் அமீர்கான் நடிக்க இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி 2-ம் பாகம் வருமா? என்ற கேள்விக்கு பதில் அளித்து கூறும்போது, ”கஜினி 2-ம் பாகம் குறித்து எனக்கு சில யோசனைகள் உள்ளன. தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கஜினி 2-ம் பாகத்தை உருவாக்க தீவிரமாக இருக்கிறார்.

சரியான நேரத்தில் 2-ம் பாகத்தை எடுப்பது குறித்து முடிவு எடுப்போம். கஜினி 2 படத்தை ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் உருவாக்குவோம். இதுகுறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )