“பிரசவத்தை நினைத்து பதட்டமாக இருக்கிறது”

“பிரசவத்தை நினைத்து பதட்டமாக இருக்கிறது”

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இந் நிலையில் தீபிகா படுகோனே சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ”எனது கர்ப்பிணி வாழ்க்கை ஆர்வத்தை கிளப்புகிறது. இந்த வாழ்க்கையை அனுபவிக்கிறேன். குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க ஒவ்வொரு நாளையும் ஜாக்கிரதையாக கழிக்கிறேன்.

முன்பு எடை கூடாமல் இருக்க விரும்பிய உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தேன். ஆனால் இப்போது விரும்பிய எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறேன். நான் அதிகம் சாப்பிட்டால் என் குழந்தைக்கு நல்லது என்று மருத்துவர் தெரிவித்தார்.

ஆனாலும் வீட்டில் தயார் செய்த உணவுகளை சாப்பிடுகிறேன். என் பெற்றோர் அடிக்கடி வந்து பார்த்து செல்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களோடு நேரத்தை கழிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பிரசவம் செப்டம்பர் மாதம் இருக்கும் என்று மருத்துவர்  தெரிவித்து இருக்கிறார். பிரசவத்தை நினைத்து கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)