கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நன்மைகள்-டக்ளஸ்

peoplenews lka

கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நன்மைகள்-டக்ளஸ்

கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக எமது மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களிலும், இன்றைய சந்திப்பிலும் மக்கள் பிரதிநிதிகளினாலும் அதிகாரிகளினாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் - ஆலோசனைகள் மற்றும் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை தெளிவான முறையில் அடையாளப்படுத்தி, அவை நடைமுறைப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதன பின்னர், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கெளதாரிமுனை காற்றாலை திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான விடேச கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் பூநகரி, கௌதாரிமுனையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலைத் திட்டத்தின் காரணமாக கௌதாரிமுனை பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளதுடன், அடிப்படை, சமூக மற்றும் வாழ்வாதார நன்மைகளையும் ஏற்படுத்துவதற்கு இந்திய முதலீட்டாளர்களினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கௌதாரிமுனை கிராமத்திற்கான சுமார் 17 கிலோமீற்றர் வீதியை காபபெற் வீதியாக அமைக்கப்படவுள்ளதுடன், சுமார் 40 கிலோமீற்றர் நீளமான உள்ளக வீதிகளும் உருவாக்கப்படவுள்ளன.

அதேபோன்று, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் மேற்கொள்வதற்கு முதலீட்டாளர்களினால் உத்தவரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என மேலும் அவர் கூறியுள்ளார்.

Share on

உள்ளுர்

peoplenews lka

போலந்து இளம் பெண் மரணம்...

தங்காலை கடலில் நீச்சலில் ஈடுப்பட்ட இளம் பெண் மரணம்.. Read More

peoplenews lka

இரட்டை சிசுக்கள் களுபோவில வைத்தியசாலையில் மரணம்...

களுபோவில வைத்தியசாலையில் இறந்த இரட்டைக்குழந்தைகள் மருத்தவ கவலையீனம் காரணமாக இறந்ததாக குற்றச்சாட்டு.. Read More

peoplenews lka

பாதாள உலகக்குழு தலைவர் கைது...

நவீன ரக பிஸ்டலுடன் பாதாள குழு தலைவர் கைது.. Read More

peoplenews lka

குளவிக்கு தப்ப உயிரை மாய்துகொண்ட சிறுவன்...

குளவிக்கொட்டுக்கு தப்பிய ஓடிய சிறுவன் குன்றிலிருந்து வீழ்ந்து மரணம்.. Read More