நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை இன்று ஆரம்பம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை இன்று ஆரம்பம்

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று(16) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இந்தநிலையில், கடந்த 10ஆம் திகதி ‘சிவகங்கை’ பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நாகபட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )