மருதாணி கருமையா சிவக்கணுமா ?

மருதாணி கருமையா சிவக்கணுமா ?

ஏதேனும் விழாக்கள் அல்லது பண்டிகைகள் வந்துவிட்டால் பெண்கள் கைகளில் மருதாணி வைத்துக்கொள்வார்கள். காரணம் மருதாணி பெண்களுக்கு அழகைக் கூட்டும்.

ஒரு சிலருக்கு மருதாணி கருமையாக சிவந்துவிடும். ஆனால், சிலருக்கு அவ்வளவாக சிவக்காது.

கைகளில் போட்டுள்ள மருதாணி நன்றாக சிவக்க வேண்டும் என்றால் ஒரு சில விடயங்களை பின்பற்ற வேண்டும்.

அந்த வகையில்,

கிராம்பு புகை – நீங்கள் கைகளில் போட்டிருக்கும் மருதாணி காய்ந்த பிறகு சூடான கிராம்பு புகையின் மேல் உங்கள் கைகளை சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.

கிராம்பிலிருந்து வெளிவரும் வெப்பம் மருதாணியின் நிறத்தை இயற்கையாகவே கருமையாக்கும்.

குளுக்கோஸ், கோர்ன் சிரப் – மருதாணி காய்ந்தவுடன் அதன் மேல் குளுக்கோஸ் அல்லது கோர்ன் சிரப்பை தடவுங்கள். இது மருதாணியை அதிக நேரம் ஈரமாக வைத்திருக்கும். இதனால் அதன் நிறம் கருமையாகும்.

விக்ஸ், தைலம் – மருதாணி காய்ந்த பின்னர் அதன் மேல் தைலத்தை தடவும்போது, இதிலிருக்கும் மெந்தோல் மருதாணியைக் கருமையாக்கும்.

அதேபோல் தேசிக்காயை பிழிந்துவிட்டாலும் மருதாணி நன்றாக கருக்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )