“முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதர்”

“முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதர்”

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்கள்.

தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியிருப்பதால் பிரசாரத்தில் இரு தலைவர்களும் ஈடுபட்டுள்ளார்கள்.

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு சிகாகோ நகரத்தில் கடந்த 20 ஆம் திகதி தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, பில் கிளிண்டன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்

இந்த தேசிய மாநாட்டின் இறுதி நாளான இன்று (23) கமலா ஹாரிஸ் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, “அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளராக, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். இந்தத் தேர்தலின் மூலம் நாம் முன்னோக்கி செல்லும் காலம் உருவாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் , “ அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதர். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் தீவிரமானதாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் மக்கள் தான் எனக்கு எஜமானர்கள்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )