நாட்டைக் கட்டியெழுப்பும் கடைசி சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் !

நாட்டைக் கட்டியெழுப்பும் கடைசி சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் !

நாட்டைக் கட்டியெழுப்பும் கடைசி சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள். ஆசை வார்த்தைகளுக்கு பலியானால் மீண்டும் ஆபத்துதான் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், தேர்தல் நடவடிக்கைகளுக்கான அலுவலகம் மீகொட
தொம்பே பகுதியில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது நீண்ட காலமாக பல்வேறு அரசியல் கட்சிகளில் கருத்துகளுக்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களித்துள்ளோம்.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் நடைபெறவுள்ள மிக முக்கியமான ஜனாதிபதித்தேர்தல் இது.

சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டைக் கட்டியெழுப்ப பல்வேறு அரசுகளின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதற்காக ஒவ்வொரு அரசாங்கமும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடன்களைபெற்றன.

இவ்வாறு இல்லாமல் எந்ததிட்டமும் நம் நாட்டில் செயல்படுத்தப்படவில்லை.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவை மானிய வட்டியில் கடன் வழங்கின.

இந்த கடன் மட்டும் போதாது என்பதால், சர்வதேச சந்தையில் அதிக வட்டிக்கும் திறைசேரி பத்திரங்கள் மூலமும் கடன்கள் பெறப்பட்டன.

இது தவிர,தேவையான அளவு பணமும் அச்சிடப்பட்டது.

இந்நிலைமை தொடர்பில் சர்வதேச நிதி நிறுவனங்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், நாடு மீளமுடியாத வகையில் வீழ்ச்சியடையப் போவதாகவும் கடன் நிலைத்தன்மையை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தன.இந்த
அபாயகரமான சூழ்நிலைக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் நிதி நிறுவனங்கள் அறிவித்தன.

எவராலும் நாட்டை மீட்டெடுக்க முடியாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ள
நிலையில், தீர்வுகளை வழங்கக் கூடிய நிபுணர்களின் உதவியை நாடுமாறு கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்தார்.

இதற்கான பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதன் பரிந்துரையின்படி, பிரான்சின் லாசார்ட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, சட்ட
ஆலோசனை வழங்க கிளிப்பர்ட்ஹான்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல தயாராகும் போது அமைச்சரவை இரண்டாக பிளவுபட்டது.

பலர் இதனை ஏற்றுக்கொண்ட போதிலும், இந்த விடயம் தொடர்பில் சர்வதேச
புரிதல் இல்லாத ஒரு குழு இதனை எதிர்த்தது.

அந்த நிலைமையின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்த தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.

இந்நிலைமை காரணமாக நாட்டில் எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மின்வெட்டு ஏற்பட்டது. நாட்டில் நிலுவைத் தொகை நெருக்கடியின் போது சர்வதேச இருப்புக்களின்றி வீழ்ச்சிக்கண்டதால் , எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகள் உருவாகின.

மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் வரிசையில் நின்று மோதினர். சிலர் இறந்தனர்.

குறுகிய அரசியல் குறிக்கோளைக்கொண்டவர்கள், மக்களின் துக்கத்தையும், வேதனையையும், வெறுப்பையும் மறைத்து மக்களை வன்முறைக்குத் தூண்டினர்.

இப்படிப்பட்ட சூழலை எதிர்கொண்டு நாட்டைக் காப்பாற்ற ஒருதலைவர் மட்டுமே துணிச்சலுடன் முன்வந்தார்.

நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டும் பொறுப்பை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மட்டுமே நிறைவேற்றியதாகவும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவரதன
மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )