ஐசிசிக்கு புதிய தலைவர் தேர்வு
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2019 ஒக்டோபர் முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பணியாற்றிய ஷா, 2024 டிசம்பர் முதலாம் திகதி இந்த மதிப்புமிக்க பதவியை ஏற்கவுள்ளார்.
தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லே (Chair Greg) மூன்றாவது முறையாக பதவியேற்க போவதில்லை என முடிவு செய்த பிறகு ஷா மட்டுமே தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், கிரிக்கெட்டின் உலகளாவிய ரீதியையும் பிரபலத்தையும் முன்னேற்றுவதற்கான தனது நோக்கத்தை ஷா வெளிப்படுத்தினார்.
குறிப்பாக 2028 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான திட்டத்தை சுட்டிக்காட்டினார். இது விளையாட்டின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய வாய்ப்பாக அவர் கருதுகிறார்.
ஷாவின் தேர்வு ஐசிசி தேர்தலில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
ஏனெனில் அது விளையாட்டின் வரம்பை விரிவுபடுத்தவும், உலகளாவிய அரங்கில் அதன் பரிணாமத்தைத் தொடரவும் முயல்கிறது.