முடிக்கு அதிகமாக எண்ணை தடவினால் ஆபத்து

முடிக்கு அதிகமாக எண்ணை தடவினால் ஆபத்து

தலைக்கு எண்ணெய் வைப்பது முதல் ஷாம்பூ பயன்படுத்துவது வரை பல பொதுவான முடி பராமரிப்பு நடைமுறைகள் உள்ளன.

இவற்றில் செய்யும் சிறு தவறுகளால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படலாம்.

அதனால் அவற்றை கவனமாக செய்து வந்தாலே போதும் முடிக் கொட்டுவதை தவிர்க்கலாம்.

01. அதில் முதலாவதாக, முடிக்கு சூடான எண்ணெய்யை எப்போதும் பயன்படுத்த கூடாது. இவற்றை பயன்படுத்தினால் முடியில் பொடுகு பிரச்சனை மட்டுமல்லாமல் தலையில் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே முடி சேதமடையாமல் இருக்க சூடான எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

02. தலைக்கு குளித்து விட்டு ஈரமான முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது இல்லை. ஈரமான முடியில் கை வைத்தாலே, பலருக்கும் முடி உதிர்வு ஏற்படும்.

03. தலைக்கு எண்ணெய் வைத்திருக்கும் போது முடியை இருக்கமாக கட்டி கிளிப் அல்லது கொண்டை போன்றவற்றை போட வேண்டாம். இதனால் முடி உதிர்வு அல்லது ஒரு சிலருக்கு தலைவலி ஏற்படும்.

04. கண்டிப்பாக இரவு தூங்கும் முன்பு முடிக்கு எண்ணெய் வைக்க வேண்டாம். இதன் காரணமாக முகப்பரு, கண்களில் எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.

05. முடிக்கு அதிகமாக எண்ணை தடவ கூடாது. அதிகமாக தடவும் போது அழுக்கு படிந்து, முடியை க்ரீஸ் போல மாற்றுகிறது. உச்சந்தலை மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு சிறிது அளவு எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. அப்படி அதிகமாக வைத்தால் 2 அல்லது 3 மணிநேரம் கழித்து தலைக்கு குளித்து விடுவது நல்லது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )