உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் வரி வருவாய் அதிகரிப்பு !
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையான 08 மாத காலத்துக்குள், உள்நாட்டு இறைவரித்திணைக்களம் 1,229, 245 மில்லியன் ரூபாவை சேகரித்து தனது இலக்கை அடைந்துள்ளதாகவும் இது 2023 ஆம் ஆண்டை விட 28.5வீத அதிகரிப்பு எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரி வகைகளுக்கமைவாக கடந்தாண்டு சேரிக்கப்பட்ட மொத்த வரி வருமானத்தையும் திணைக்களம் அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட மொத்த வருமானம் 956,418 மில்லியன் ரூபாவாகும்.
இவ்வருடத்தில் திணைக்களம் 1,229,245 மில்லியன் ரூபா வரை, 28.5 வீதத்தினால் வரு
மானத்தை அதிகரிப்பதில் வெற்றி கண்டுள்ளதுடன் அதன் மூலமாக அரசாங்கத்தின் நிதி நிலவரத்தைவலுவான அடிதளத்தில் வைத்திருக்க பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
மேற்கூறப்பட்ட வருமான இலக்குகளை அடையும் முயற்சிக்கு உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புடனான பங்களிப்பு, வரி நிர்வாகத்தினால் உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட
விரைவான நடவடிக்கைகள், 2024ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சவால்மிக்க வரித்திருத்தங்கள், பொருளாதாரத்தில் ஏற்பட்ட படிப்படியான முன்னேற்றம், வரி
செலுத்துநர்கள் மற்றும் வரி நிபுணர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நாடு முழுவதும் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் வரி செலுத்துநர்களின இணக்கப்பாட்டின் அதிகரிப்பு என்பன பங்களித்துள்ளது.
நாட்டுக்காக தற்போதுள்ள வரிச்சட்டங்களின் இணக்கப்பாட்டின்பிரகாரம், வரிகளை செலுத்திய வரிசெலுத்துநர்கள், நாட்டின் நன்மைகாக தங்களது பங்களிப்பை நல்கிய
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோத்தர்கள் மற்றும்பொது மக்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.