வாக்களிக்க விடுமுறை வழங்குவது கட்டாயம்

வாக்களிக்க விடுமுறை வழங்குவது கட்டாயம்

தனியார் மற்றும் அரைஅரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு அமைப்பின் தலைவர் இந்த சட்டத்திற்கு இணங்காமல், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவில்லை என்றால், அதுபற்றி பெப்ரல் அமைப்புக்கு அறிவிக்குமாறு அதன் தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிறுவன தலைவர் சட்டத்தின் முன் குற்றவாளி எனவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இரண்டு இலட்சம் ரூபாய் அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சம்பவங்கள் பதிவாகினால் அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )