புலமைப்பரிசல் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்

புலமைப்பரிசல் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (15) பிற்பகல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு 323,841 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன், நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது.

அதன்படி நேற்று (15) நிறைவடைந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வினாத்தாள்கள் குறித்து மீண்டும் கேட்டு பிள்ளைகளை ஒடுக்க வேண்டாம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )