மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதி பதவியேற்பு

மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதி பதவியேற்பு

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஜனாதிபதி தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரேனா கட்சி (இடதுசாரி) சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிளாடியா ஷீன்பாம், ஏறக்குறைய 60 சதவீத வாக்குகளைப் பெற்று, அசைக்க முடியாத முன்னிலையுடன் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நடந்த பதவியேற்பு விழாவில் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றுக்கொண்டார்.

உலக அளவில் புகழ் பெற்ற காலநிலை ஆராய்ச்சியாளரான ஷீன்பாம், 2007-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவராவார். 2018-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மெக்சிகோ நகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2006 வரை நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இவா் பொறுப்பு வகித்துள்ளாா்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )