வெற்றிகளை அள்ளித்தரும் ‘விஜயதசமி’ திருநாள் !
நவராத்திரி விழாவின் நிறைவையடுத்து பத்தாவது நாள் விஜயதசமியாக இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
விஜயதசமி என்பது வெற்றியைக் கொண்டாடும் நாளாகும்.
இது தீமை அழிந்து, நன்மை உலகில் நிலைநாட்டப்படுவதைக் கொண்டாடும் திருநாளாகும்.
நவராத்திரி விழாவின் உச்ச நிகழ்வாக கொண்டாடப்படுவது சரஸ்வதி பூஜை,
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா ஆகியனவாகும்.
நவராத்திரி வழிபாட்டின் முழுமையான பலனையும் தரக்கூடிய நாட்கள்தான் இவை.
நவராத்திரியின் முதல் எட்டு நாட்கள் விரதம் இருந்து, அம்பிகையை அந்தந்த நாளுக்குரிய முறையில் வழிபட முடியாதவர்களும் கூட கடைசி இந்த இரண்டு நாட்களில் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நலன்களையும் பெற முடியும்.
நவராத்திரி விழா இந்த ஆண்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி தொடங்கி, ஒக்டோபர் 11 ஆம் திகதியான நேற்றுவரை கொண்டாடப்பட்டது.
நவராத்திரியின் நிறைவு நாளும், ஒன்பதாவது நாளுமான ஒக்டோபர் 11 ஆம்
திகதி வெள்ளிக்கிழமையைத் தொடர்ந்து இன்று விஜயதசமி அனுஷ்டிக்கப்படுகின்றது.
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களுமே ஞானத்தை வழங்குகின்ற
கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய வழிபாட்டு நாட்களாக இருந்தாலும், நவராத்திரியின் ஒன்பதாவது நாள்தான் சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகின்றது. அன்றைய
தினமே ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை ஆகிய இரண்டும் 11 ஆம் திகதியான நேற்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டன.
மகிஷாசுரனை வதம் செய்வதற்காக கடும் தவம் இருந்து, ஒவ்வொரு தெய்வங்களிடம் இருந்து அன்னை பராசக்தி ஒவ்வொரு விதமான சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பெற்றாள்.
போரின் இறுதிநாளில், போர்க்களத்திற்கு புறப்படுவதற்கு தெய்வங்களிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை வைத்து, அன்னை பராசக்தி பூஜை செய்து வழிபடுகிறாள்.
தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக அன்னை பராசக்தி ஆயு
தங்களை வைத்து வழிபட்ட இந்த நாளையே இந்துக்கள் ஆயுத பூஜையாக
கொண்டாடுகின்றனர்.
நவராத்திரி ஒன்பது நாட்களைக் கொண்ட வழிநாட்டு விழாவாக இருந்தாலும் அதன் இறுதி நாளாக கருதுவது வளர்பிறை தசமி நாளைத்தான்.
அம்பிகை பத்தாவது நாளில் மகிஷனை போரில் வதம் செய்து வீழ்த்தி, வெற்றி வாகை சூடிய நாளையே விஜயதசமியாக நவராத்திரியின் பத்தாவது நாளில் கொண்டாடுகின்றனர்.
இது அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக, மகிஷனைவதம் செய்த நாளாகவும், இராமாயணத்தின் இராமபிரான், இராவணனை போரில் வதம் செய்த நாளாகவும் கருதி
இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு விஜயதசமி விழா ஒக்டோபர் 12 ஆம் திகதியான இன்று சனிக்கிழமை வருகிறது.
இது புரட்டாசி கடைசி சனிக்கிழமையும் ஆகும்.
இந்த நாளில் புதிய தொழில்கள், கல்வி, கலைகள் சார்ந்த பணிகளைத் தொடங்குவது வழக்கம்.
குழந்தைகள் கல்வியை ஆரம்பிக்கும் வித்தியாரம்பம் நிகழ்வும் விஜயதசமி நாளில் நடத்தப்படுகிறது.
விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு அரிசி, நெல் ஆகியவற்றில் முதல் எழுத்தை எழுத வைத்தால் அவர்கள் அன்னை பராசக்தியின் அருளால் மேலும் மேலும் கல்
வியில் உயர்வார்கள் என்பது நம்பிக்கை.
புதிய தொழில்கள், வியாபாரம் தொடங்குபவர்கள், புதிய சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் இந்த நாளில் தொடங்குவது வழக்கமாக உள்ளது.
வெற்றிக்குரிய விஜயதசமி நாளில் தொடங்கப்படும் காரியங்கள் அம்பிகையின் அருளால் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம்.
வாழ்க்கையில் நாம் செய்யும் அல்லது தொடங்கும் தொழில்களில் வெற்றிகள்
கிடைக்க வேண்டும் என்பதற்காக வழிபடக் கூடிய நாளே விஜயதசமி திருநாள் ஆகும்.
இது புரட்டாசி கடைசி சனிக்கிழமையுடன் இணைந்து விஜயதசமி வருவது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.
இந்த நாளில் தொழில் நிறுவனங்களில், தொழில் செய்யும் பொருட்களை வைத்து தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவார்கள்.
வீட்டில் இருக்கும் வாகனங்கள் ஆகியவற்றையும் சுத்தம் செய்து, அவற்றுக்கு சந்தனம்,
குங்குமம் தொட்டு வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.
வித்யாரம்பம், விஜயதசமி பூஜை செய்வதற்கான நல்ல நேரம் வருமாறு:
காலை 06.30 முதல் 08.30 வரை,காலை 10.35 முதல் 01.20 வரை,
மாலை 6 மணிக்கு மேல்