பிரதமராக இருந்த காலத்தில் 5 மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சமாக தர முயன்றனர் !

பிரதமராக இருந்த காலத்தில் 5 மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சமாக தர முயன்றனர் !

பிரதமராக தாம், பதவி வகித்த காலத்தில் ஒருமுறை 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமக்கு இலஞ்சமாக வழங்க முயற்சித்ததாகவும், அதனை உடனடியாக தாம், நிராகரித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பட்டயக் கணக்காளர்களின் 45 ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் ஊழல்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர் ,

‘நான், பிரதமராக இருந்த காலப்பகுதியிலே இச்சம்பவம் நடைபெற்றது.

இச்சம்பவத்தின் போது நான்,பாராளுமன்றத்தில் இருந்தேன்.

அப்போது எனது மேசைக்கு ஒருவர் 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை
எடுத்து வந்தார்.

எடுத்து வந்தவரிடம் பணத்தை எடுத்துக்கொண்டு இப்போதே வெளியேறி விடுங்கள் என வலியுறுத்தினேன்.

எனது அரசில் இருந்த இளம் அமைச்சரின் கணவரால் அது கொண்டுவரப்பட்டது.

நாஙு உன்னை கைது செயவென் இப்போதே வெளியேறு என சொன்னேன்

இந்த நபருடன் சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவரும் இருந்தார்

ஊழலுக்குப் பழக்கப்பட்டபெரியவர்களின் மனதை மாற்றுவது சாத்தியமில்லை’

சிறு வயதிலிருந்து இது தொடர்பான விழுமியங்களை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை இதன் பொது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )