குதிரைகள் நின்றுகொண்டே உறங்குவதன் காரணம் ?

குதிரைகள் நின்றுகொண்டே உறங்குவதன் காரணம் ?

குதிரைகள் மட்டும் ஏன் நின்றுகொண்டே உறங்குகின்றன என்ற சந்தேகம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

அதற்கு காரணம் தங்களை வேட்டையாட வரும் ஏனைய விலங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காகவே குதிரைகள் நின்றுகொண்டே உறங்குகின்றன என கூறப்படுகிறது.

குதிரையின் உடல் எடை அதிகமாகவும் அதன் முதுகு நேராக இருப்பதனால் ஒரு தடவை அமர்ந்துவிட்டால் அதனால் வேகமாக எழுந்திருக்க முடியாது.

அது எழுவதற்குள் ஏனைய விலங்குகள் அதனை வேட்டையாட வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதனால் இயற்கையாகவே குதிரைகளுக்கு நின்றுகொண்டு உறங்கும் ஆற்றல் உள்ளது.

நின்றுகொண்டு உறங்கும்போது குதிரைகள் விழுந்துவிடாதா என்று சிலருக்கு நினைக்கத் தோன்றும்.

குதிரைகளின் கால்களில் சிறப்புத் திறன் இருப்பதால் உறங்கும்போது முழங்கால்களை விறைத்து நிற்கும். இதன் காரணமாகவே உறங்கும்போது கூட குதிரைகள் கீழே விழாமல் நிற்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )