“உலக பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு ”

“உலக பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு ”

விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்துடன் வேகமாக முன்னேறும் உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு இருக்கின்றதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை தர்மராஜா பிரிவேனா விகாரையில் நேற்று (23) முற்பகல் நடைபெற்ற அரச வெசாக் விழாவில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர, “மாத்தளை வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவிகாரையில் திரிபீடகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதன் காரணமாகவே புனித பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டது. தேரவாத பௌத்தத்தின் முக்கிய இடமாக விளங்கிய மாத்தளை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இவ்வருடம் அரச வெசாக் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தமை  மகிழ்ச்சி.

அநுராதபுர யுகத்தில் இருந்த பிரிவேனாக்களில் இருந்து மகா சங்கத்தினர் மட்டும் உருவாகவில்லை. உலகின் முக்கியமான நீர்ப்பாசன முறையை இலங்கையில் ஆரம்பிக்கும் வாய்ப்பு அந்தக் கல்வி முறையினால் கிடைத்ததாக செனரத் பரணவிதான போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இன்று உலகம் மூடநம்பிக்கையிலிருந்து விலகிச் செல்கிறது. அறிவியலில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தால், பல நூற்றாண்டுகளாக நமது வாழ்க்கை முறை முற்றிலும் மாறி வருகிறது. குறிப்பாக மருத்துவத் துறையும் தொழில்நுட்பத் துறையும் வளர்ச்சியடைந்துள்ளன. அதேநேரம், வானவியல் பற்றிய புதிய அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட அறிவின் வளர்ச்சியுடன், நாம் இன்னும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால் தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அதன் உண்மையான அர்த்தத்தை அறிந்தவர்களுக்கும் இது ஒரு பிரச்சினையல்ல. தேரவாத பௌத்தத்தின் ஊடாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். எனவே, தேரவாத பௌத்தத்தின் உண்மையான நோக்கத்தைப் பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )