சீரற்ற காலநிலை ; 13 பேர் உயிரிழப்பு
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாகவும், காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதன்படி 100,032 குடும்பங்களை சேர்ந்த 441, 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 38,616 பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்