புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி
மூதாட்டி ஒருவர் ஒரு மணி நேரத்தில் 1,500 புஷ்-அப்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கனடாவை சேர்ந்தவர் டோனாஜீன் வையில்டின். 59 வயதான இவர் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது 2-வது உலக சாதனையை படைத்துள்ளார்.
கனடாவை சேர்ந்தவர் டோனாஜீன் வையில்டின். 59 வயதான இவர் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது 2-வது உலக சாதனையை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், `நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் என்னை வலுவாக உணர்ந்தேன். அடுத்த 17 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான புஷ்-அப்களை முடிக்க இலக்கு வைத்துள்ளேன் என்றார்.
டோனாஜீனுக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கூறுகையில், எங்களின் பாட்டி மிகவும் அற்புதமானவர் என்றனர்.
CATEGORIES World News