சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த விதியை மீறும் நிறுவனங்களுக்கு ரூ 250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய டிக்டொக், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், ரெடிட், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்படும்.

“சிறுவர்களை கைத்தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களிலிருந்து விலகி, விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன் என அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )