எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்

எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்

எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர், உபதலைவர் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 15 உறுப்பினர்கள் இன்று (10) காலை பிரதி அமைச்சர் ரத்ன கமகே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 

இந்நிகழ்வில் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேராவும் கலந்துகொண்டார்.

எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவராக சனத் சுமனசிறியும், உபதலைவராக சுமித் பத்திரகேவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், மூன்று பெண் சபை உறுப்பினர்கள் உட்பட 12 உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய கடல் நீரியல் வளங்கள் மற்றும் கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே, எல்பிட்டிய பிரதேச சபையை இலங்கையின் சிறந்த பிரதேச சபையாக மாற்றுவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம் என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )