மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆற்றுப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் , மாணிக்ககல் அகழ்வதற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள டிக்கோயா ஆற்றுப்பகுதியில் சிலர் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஹட்டன் பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்தினபுரி, கஹவத்தை, பலாங்கொடை, ஹட்டன் மற்றும் டிக்கோயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25-40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.